புதுச்சேரி மாநிலம் குமரகுரு பள்ளம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதாரத்துறையின் தேசிய கொசு, பூச்சிகளால் பரவும் நோய்த்தடுப்புப் பிரிவின் சார்பாக டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் இடங்கள் கண்டறிந்து அதனை அழிக்கும் கள ஆய்வுப் பணி இன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் சுகாதார துறை இயக்குனர் மோகன் குமார், அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் வாசுதேவன் உள்ளிட்ட அலுவலர்கள் குமரகுரு பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கொசு உற்பத்திக்கு காரணமான பொருட்களை கண்டறிந்து அதனை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டார்.