தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி மீன் அங்காடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - Puducherry fish market

புதுச்சேரி: கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மீன் அங்காடியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Collector inspects Puducherry fish market store
Collector inspects Puducherry fish market store

By

Published : Jun 10, 2020, 9:32 PM IST

புதுச்சேரி, கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள நவீன சுகாதார மீன் அங்காடி, பெரிய மார்க்கெட் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் அருண், காவல் துறைத் தலைவர் பாலாஜி ஸ்ரீவத்சவா ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது, மீன் மற்றும் காய்கறி அங்காடிகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றனவா? வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கின்றனரா? அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கின்றனரா? என்பன குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர்கள், உள்ளாட்சித் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details