தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொச்சி விமான நிலையம் மூடல்! - கனமழை

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்யும் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் வரும் 11ஆம் தேதி வரை மூடப்படவுள்ளது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொச்சி

By

Published : Aug 9, 2019, 1:17 PM IST

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக மாநிலத்தில் பல இடங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

கடந்த வருடம் பெய்த கனமழையால் கேரளாவே வெள்ளத்தில் தத்தளித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது. வீடுகள், உடமைகள் உள்ளிட்டவை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

கொச்சி விமான நிலையம் மூடல்!

இதையடுத்து இந்தாண்டு அதேபோல் நிகழாமலிருக்க பல்வேறு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில், தொடர்ந்து பெய்யும் கனமழையால் கொச்சி விமான நிலையம்11ஆம் தேதி வரை மூடப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையினால் விமான நிலையத்திற்கு உள்ளேயே தண்ணீர் சூழ்ந்துள்ளது, விமானங்கள் எல்லாம் திசை திருப்பப்பட்டுள்ளன, அதிக மழையினால் விமானங்கள் எதுவும் இயக்கப்படாமல் உள்ளன.

ABOUT THE AUTHOR

...view details