வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கொக்கேன் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகம் அடைந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அரசு மருத்துவமை ஒன்றில் அவர் மீது எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொண்டனர்.