சத்தீஷ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இரபள்ளி என்ற கிராமத்தில் நக்ஸலைட்டுகள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கோப்ரா படைப்பிரிவு ராணுவ வீரர்களுக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் அந்தப் பகுதிகளில் கோப்ரா படைவீரர்கள் ரோந்து சுற்றிவந்தனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்ஸலைட்டுகள் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு நக்ஸலைட் கொல்லப்பட்டார். ராணுவ வீரர்கள் தரப்பில் இருவர், வீரமரணத்தைத் தழுவினர்.