தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆராய்ச்சிக் கப்பல் தீ விபத்தில் சிக்கிய 16 விஞ்ஞானிகள் மீட்பு! - ship fire accident

மங்களூரு : கர்நாடக மாநிலம் மங்களூரு கடற்கரை அருகே ஆராய்ச்சிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 16 விஞ்ஞானிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் கடலோர காவல் படை

By

Published : Mar 16, 2019, 4:04 PM IST

கர்நாடக மாநிலம் மங்களூரு கடற்கரை அருகே சென்ற ஆராய்ச்சி கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு இரண்டு கப்பல்களில் வந்த இந்திய கடலோர காவல்படை வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் தீ விபத்து ஏற்பட்ட கப்பலில் இருந்த 16 விஞ்ஞானிகள் உட்பட 36 பணியாளர்கள் எந்த காயமின்றி தப்பித்ததாக கடலோரக் காவல்படை அறிவித்துள்ளது. மேலும், தீ விபத்தில் சிக்கிய கப்பல், தற்போது மங்களூரு துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details