தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிலக்கரி சுரங்க முறைகேடு: முன்னாள் மத்திய அமைச்சர் குற்றவாளி - டெல்லி சிறப்பு நீதிமன்றம்

1999ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஏல ஒதுக்கீடில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரே ஊழல் செய்ததாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Coal scam
Coal scam

By

Published : Oct 6, 2020, 12:28 PM IST

ஜார்கண்ட் மாநிலம் கிரித் பகுதியில் உள்ள பிரஹ்மதிஹா என்ற நிலக்கரிச் சுரங்கத்தை 1999ஆம் ஆண்டு ஏல ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் திலீப் ரே குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராசர் தீர்ப்பளித்துள்ளார். அத்துடன், நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் மூத்த அலுவலர்கள் பிரதீப் குமார் பானர்ஜி, நித்யானந்த் கவுதம் ஆகியோர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.

இவர்களுக்கான தண்டனை விவரம் குறித்த வாதங்கள் வரும் 14ஆம் தேதி (அக்.14) அன்று நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் தீலிப் ரே 1999ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாஜக ஆட்சியில் உள்ள உ.பி, பிகாரை மாஃபியாக்கள் ஆளுகின்றனர் - பாஜக தலைவர் பரபரப்பு பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details