உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சரின் பாதுகாப்பிற்கு இடையூறு அளிக்கும் வகையில், அம்மாநில காவல் துறைக்கு வாட்ஸ்அப் செயலியில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைக் கொல்ல வெடிகுண்டு வைக்கப் போவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
குண்டு வச்சிடுவோம்... முதலமைச்சருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல்! - யோகி ஆதித்யநாத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்
லக்னோ: உத்தரப் பிரதேச முதலமைச்சர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக காவல் துறையினருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
உபி., முதலமைச்சர்
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மூன்று மாதங்களுக்கான மின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் - சந்திரபாபு வலியுறுத்தல்