குஜராத்தில் கெபச்சாடா கிராமத்தில், பிறந்து 5 நாள்களே ஆன பெண் குழந்தை ஒன்றை அந்தப் பகுதியில் உள்ள நாய்கள் தாக்கின. இதையடுத்து அங்கிருந்த சிறுவர்கள் நாய்களிடமிருந்து அந்தக் குழந்தையை மீட்டனர். பிறகு குழந்தை அப்பகுதியில் உள்ள அம்ருதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தை குறித்து விசாரிக்க அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி சென்றார். இதைத்தொடர்ந்து அந்தக் குழந்தைக்கும் அம்பே என பெயர் வைக்கப்பட்டது.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், புதிதாக பிறந்த குழந்தையை தூக்கி எறிந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. நாய்கள் கடித்த அந்தக் குழந்தையை கிராம மக்கள் காப்பாற்றியுள்ளனர். முழு மனத்துடன் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த நிர்வாகத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார். குழந்தையின் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... 1.05 லட்சம் கோடி ரூபாய் வருவாய்: சரக்கு மற்றும் சேவை வரியில் தொடரும் சாதனை!