புதுச்சேரி அய்யன்குட்டி பாளையம் பகுதியில் அரசு நிறுவனமான பான்லே என்னும் பாக்கெட் பால் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.
இங்கு பணிபுரியும் 970 ஊழியர்களுக்கு கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட கோவிட்-19 தடுப்பு கிட்டை முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் வைத்து வழங்கினார்.
மேலும் வெளி மாவட்டங்களுக்கு பொருள்களை கொண்டுசெல்ல அதிநவீன குளிர்சாதன வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கந்தசாமி, ஆலையின் மேலாண் இயக்குநர் சுதாகர், அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பான்லே ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பு கிட் வழங்கிய முதலமைச்சர்! - பான்லே பால்
புதுச்சேரி: பான்லே ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பு கிட்டுகளை முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார்
![பான்லே ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பு கிட் வழங்கிய முதலமைச்சர்! பான்லே](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:25:09:1594392909-tn-pud-08-ponla-cm-coranakit-given-7205842-10072020202049-1007f-1594392649-1053.jpg)
பான்லே