தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருமாவளவன் பேசுவதை முழுமையாக கேட்டுவிட்டு நடவடிக்கை எடுங்கள் - புதுச்சேரி முதலமைச்சர் - பொய்புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை

புதுச்சேரி: திருமாவளவனின் முழு பேச்சையும் கேட்டுவிட்டு பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

cm narayanasamy
cm narayanasamy

By

Published : Oct 26, 2020, 9:58 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "மனுஸ்மிருதியில் பெண்களை தவறாக சித்தரித்திருக்கும் அந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என தந்தை பெரியார், சட்டமேதை அம்பேத்கர் ஆகியத் தலைவர்கள் போராடியுள்ளனர்.

திருமாவளவனின் முழு பேச்சையும் கேட்காமல் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனு நூலை தடை செய்ய வேண்டும் என்று தான் அவர் கூறியுள்ளார். அவர் மீது பழி போட வேண்டும் என்று தான் பாஜக புகார் கூறியுள்ளது. திருமாவளவனின் முழு பேச்சையும் கேட்டு விட்டு பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் பேசியதில் தவறு இல்லை

இதையும் படிங்க:கேட்பாரற்று கிடக்கும் பழமை வாய்ந்த நெற்குதிர்-தொல்லியல்துறை கவனிக்குமா?

ABOUT THE AUTHOR

...view details