புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கரோனா தொற்றின் தாக்கம் புதுச்சேரியில் கடந்த பத்து நாள்களாக அதிகளவில் உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் கரோனா உயிரிழப்பு 1.57 விழுக்காடாக உள்ளது.
புதுச்சேரிக்கு வந்த உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் செளமியா, 2021ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு தான் கரோனாவிற்கு மருந்து கிடைக்கும் என தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் கரோனா தொற்றோடு வாழ வேண்டிய சூழல் உள்ளது. மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அரசு மற்றும் மருத்துவர்களை குறை சொல்வது சரியாக இருக்காது. மக்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.