புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலில் நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "மத கலவரத்தை தூண்டுவதற்கு வேல் யாத்திரையை பாஜகவினர் நடத்துகின்றனர்.
மத கலவரத்தை தூண்டும் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை: நாராயணசாமி - புதுச்சேரி மாநில செய்திகள்
புதுச்சேரி: மத கலவரத்தை தூண்டும் வேல் யாத்திரைக்கு புதுச்சேரியில் அனுமதி இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மத கலவரத்தை தூண்டும் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என பேட்டி
வேல் யாத்திரை நடத்த புதுச்சேரியில் அனுமதி இல்லை. அனைத்து தேர்தல்களிலும் வாக்கு சீட்டு முறைகளையே கடைபிடிக்க வேண்டும். பிகார் தேர்தலில் மோடி அலை வீசவில்லை. மோடி அலை வீசினால் ராஷ்டிரிய ஜனதா தளம் ஏன் அங்கு அதிக இடங்களை பிடித்துள்ளது" என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: வேல் யாத்திரை அல்ல; அது அரசியல் யாத்திரை’ - தமிழக அரசு