தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்படும்: நாராயணசாமி!

புதுச்சேரி: ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது தொடர்பாக மாநில அமைச்சரவை கூடி முடிவு எடுக்கும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Cm Narayanasamy Press Meet
Cm Narayanasamy Press Meet

By

Published : Jul 31, 2020, 5:24 PM IST

புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள உருளையன்பேட்டை தனியார் திரையரங்கு வளாகத்தில் கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமை முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கிவைத்தார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "புதுச்சேரியில் கரோனா மருத்துவ பரிசோதனை இப்போது பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப் பகுதிகளிலும் சோதனையை அதிகப்படுத்தும் விதமாக நடமாடும் கோவிட் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது தொடர்பாக மாநில அமைச்சரவை கூடி முடிவு தெரிவிக்கப்படும். மேலும், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அது பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

அவை வந்தவுடன் அது தொடர்பாக எமது கருத்துக்கள் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

உருளையன்பேட்டை கரோனா பரிசோதனை முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details