தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படும் சிபிஐ! - நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: சிபிஐ ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

narayanasamy

By

Published : Sep 7, 2019, 8:40 AM IST

புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் முடிவடைந்து முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் துறை அமைச்சர்கள் பதிலளித்த பின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, சட்டப்பேரவை அலுவல் நேற்றுடன் முடிவுபெற்று பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சட்டப் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், "2019-20ஆம் ஆண்டுக்கான ரூபாய் எட்டாயிரத்து 425 கோடி திட்ட மதிப்பீடு செய்து அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கி வளர்ச்சிப்பாதையில் புதுச்சேரியை கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காக திட்டங்களை கொடுத்துள்ளோம்.

இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்து அம்சங்களும் நிறைவேற்றி வைக்கப்படும். குறிப்பாக விவசாயத் துறை, கால்நடைத் துறை, சமூகநலத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கியுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு விவசாயத்திற்கு கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இலவச அரிசி திட்டத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவோடு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க வேண்டும். நாளை (செப். 9) அவரை சந்தித்து இதனை வலியுறுத்துவோம்: ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

மேலும் கர்நாடகாவில் முன்னாள் அமைச்சர் மீது தேவையில்லாமல் பழிவாங்கும் நடவடிக்கை பாய்ந்துள்ளது சிபிஐ ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதையே காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details