பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் என்பவர் ஐநாவில் எட்டு வருடம் பணியாற்றிவிட்டு இந்தியா திரும்பி, 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெறுவதற்கு நவீன திட்டங்கள் வகுத்துக் கொடுத்தார்.
இதனையடுத்து, 2013ல் 'சிட்டிசன்ஸ் பார் அக்கவுன்டபுள் கவர்னன்ஸ்' என்ற அமைப்பைத் தொடங்கி, 2014 மக்களவைத் தேர்தலில் மோடி அலையை உருவாக்கி அவரை அரியணை ஏற்றியதில் பிரசாந்த் கிஷோர் பெரும்பங்காற்றினார். இது, அரசியல்வாதிகளின் பார்வையை இவர் பக்கம் திருப்ப வழிவகுத்தது.
தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு தனது அமைப்பின் பெயரை 'இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்சன் கமிட்டி', அதாவது 'ஐபேக்' என மாற்றினார். இதன்மூலம், தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகளுக்குத் தேவைப்படும் தேர்தல் வியூகங்கள், விளம்பரங்கள், யுக்திகளை வகுத்து கொடுத்து வருகிறார். இதற்காக இவருக்கு பல கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.