மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்கு அளித்துள்ள தகவலில், “மாநிலத்தில் ஏறக்குறைய ஐந்து லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, உறைவிடம், பாதுகாப்பு என பல்வேறு வசதிகள் கடந்த 40 நாள்களாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வீடு திரும்ப விரும்புகின்றனர். கடந்த சில வாரங்களாக இந்த மக்களுக்கு வருமானம் இல்லை. எனவே, மனிதாபிமான அடிப்படையில், அவர்களின் பயணத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது.
இதற்கிடையில் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் பயணத்துக்கான தொகையை ஏற்க முன்வந்துள்ளனர். இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்கான கட்டணமில்லாத ரயில் சேவை அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
முன்னதாக இதே கோரிக்கையை மாநில நிதி அமைச்சர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, 'கை' கொடுக்கும் காங்கிரஸ்!