கொல்கத்தா:மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், பாஜக மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, தனது எம்எல்ஏ பதவியை நேற்று (டிச.16) ராஜினாமா செய்ததால், கட்சியினரிடையே சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (டிசம்பர் 16) கூச் பெகர் நகரில் அக்கட்சியினருடன் ஆலோசனை நடத்திய மம்தா பானர்ஜி, வன்முறை, பிரிவினைவாத அரசியிலில் பாஜகவினர் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் அவரது கட்சியில் அதிருப்தியுடன் இருக்கும் தலைவர்களையும் சாடினார். அப்போது பேசிய அவர்," திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தொடக்கத்திலிருந்து இருப்பவர்கள், கடைசி வரை இங்கேயே இருப்பார்கள். மக்கள் தங்களது குணத்தை தினமும் மாற்றிக்கொண்டு இருக்க முடியாது. ஆடைகளை மாற்றலாம். ஆனால் கொள்கைகளை மாற்ற முடியாது.