புதுச்சேரி பிரதேசத்தின் காரைக்காலில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி அரசு வேண்டுகோளுக்கிணங்க கடைகளை அடைப்பதற்காக கருத்துக் கேட்கும் கூட்டம் காரைக்கால் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்றது.
கரோனா பரவல்: காரைக்காலில் நகைக் கடைகள் மூடல்! - காரைக்காலில் நகை கடை மூடல்
புதுச்சேரி: கரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், காரைக்கால் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் சார்பில் இன்று முதல் ஒருவார காலத்திற்கு நகைக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
jewellers
இதில், ஜுவல்லரி அசோஷியேஷன் சார்பில் இன்று முதல் ஜூலை 21ஆம் தேதி வரை மூட முடிவெடுத்தனர். வாடிக்கையாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதியும் புதுச்சேரி அரசின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்டத்தில் உள்ள 90 நகைக்கடைகள் மூடப்பட்டன. மேலும், புதுச்சேரியில் கரோனா பாதிப்பு ஆயிரத்து 500ஐ தாண்டிய நிலையில், காரைக்காலில் மொத்த பாதிப்பு 112ஆக உள்ளது.
இதையும் படிங்க:இதை செய்தால் கரோனா பிடியிலிருந்து தப்பிக்கலாம் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்