இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பெருமை நான்காவது முறையாக மத்தியப் பிரேதச்சத்தின் இந்தூருக்கு கிடைத்துள்ளது. மிகவும் பரபப்பான இந்தூர் நகரத்தில் உள்ள குப்பைகள் அனைத்தும் அகற்றப்படுவது மட்டுமின்றி மக்கும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இத்தகைய அழகான நகரத்தில் தற்போது கரோனா வைரஸ் உள்ளே புகுந்து ஆட்டம் காட்டி வருகிறது. இதுவரை இந்தூரில் 173 நபர்கள் கரோனா வைரஸ்சினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை ஆர்வலர் அமுல்யா நிதி கூறுகையில்," கரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தூர் அரசு அலுவலர்கள் விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர் ஆனால், ரயில், சாலை வழியாக கரோனா பாதித்தவர்கள் வரலாம் என்பதை மறந்து விட்டனர். சுமார் 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்தூர் நகரத்தில், மார்ச் முதல் வாரத்திலே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கவேண்டும் என்றார்.