மத்திய இணை அமைச்சரும், பாடகருமான பாபுல் சுப்ரியோ மேற்குவங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு செப்டம்பர் 19ஆம் தேதி சென்றார். அப்போது, இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட கைகலப்பில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
போராட்ட களமாகும் பல்கலைக்கழகம்! - ஏ.பி.வி.பி
கொல்கத்தா: பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவர்கள் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
![போராட்ட களமாகும் பல்கலைக்கழகம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4528279-thumbnail-3x2-jadav.jpg)
பின்னர், மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்து பாஜக மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவர்கள் நுழைய முயன்றபோது, அவர்களை கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தடுத்தி நிறுத்தினர்.
இதனிடையே ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவர்களுக்கும், காவல் துறையினருக்கும் மோதல் வெடித்தது. பேச்சுவார்த்தையில் காவல் துறையினர் ஈடுபட முயன்றபோதும் அதனை ஏற்காமல் ஏ.பி.வி.பியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.