தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசியலமைப்பு விழுமியங்களின் பாதுகாவலர் நீதித் துறை: தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே - டெல்லி நீதித்துறை மாநாடு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, அரசியலமைப்பு, தனிநபர் உரிமை

டெல்லி: அரசியலமைப்பு விழுமியங்களின் பாதுகாவலர் நீதித் துறை என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கூறினார்.

S.A. Bobde  globalisation  Judiciary and the Changing World'  International Judicial Conference 2020  அரசியலமைப்பு விழுமியங்களின் பாதுகாவலர் நீதித்துறை: தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே  டெல்லி நீதித்துறை மாநாடு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, அரசியலமைப்பு, தனிநபர் உரிமை  CJI says privacy a concern, proposes one law on environment
CJI says privacy a concern, proposes one law on environment

By

Published : Feb 23, 2020, 7:49 PM IST

தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு, வெகுஜன தரவு சேகரிப்பு ஆகியவை தனிநபரின் உரிமை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கூறினார்.

நீதித் துறை, மாறிவரும் உலகம் என்ற தலைப்பில் 2020 சர்வதேச நீதித் துறை மாநாடு டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் விஸ்தரிக்கப்பட்ட கட்டடத்தில் நடந்துவருகிறது.

நீதித் துறையின் சவால்

மாநாட்டின் இரண்டாம் நாள் மற்றும் நிறைவு விழா மாநாட்டில் கலந்துகொண்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கூறும்போது, “தகவல் தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு மற்றும் வெகுஜன தரவு ஆகியவை தனிநபர் உரிமை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “உலகெங்கிலும் உள்ள நீதித் துறைகளுக்கு மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்திய உலகமயமாக்கலின் இரண்டு அம்சங்கள் உலகளாவிய தேவை அளிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் பெருக்கம் ஆகும்.

சட்டத்தின் ஆட்சி

இந்தியாவில் மின் நீதிமன்றங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு நீதித் துறை அலுவலர் எங்கிருந்தாலும் தொடர்புகொள்ள முடியும். இந்தியாவில், நீதியை வழங்குவதற்கும் உதவுவதற்கும் தொழில்நுட்பத்தை புதுமையான வழிகளில் பயன்படுத்துகிறோம்.

சுதந்திரமான மற்றும் வளரும் நாடுகளுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இந்தியா செயல்படுகிறது. எங்கள் சொந்த தீர்ப்புகள் நமது சர்வதேச சகாக்களின் புத்திசாலித்தனத்தை நோக்குகின்றன.

நீதித் துறை என்பது அரசியலமைப்பு விழுமியங்களின் பாதுகாவலர். சட்டத்தின் ஆட்சிக்கு உறுதியளிக்கும்வகையில் எதிர்- சமநிலை ஜனரஞ்சக சக்திகளுக்கு உதவுகிறது. அதிகப்படியான பெண்களை நீதித் துறைக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தொடர்கிறது" என்றார்.

இதையும் படிங்க :ஒளவையாரின் பொன்மொழியை குறிப்பிட்டு பேசிய மோடி!

ABOUT THE AUTHOR

...view details