உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி பதவி ஏற்றார். தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இருக்கும்போது, அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என ரஞ்சன் கோகாய் உட்பட நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்பினை நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால், இவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றதிலிருந்து, தீபக் மிஸ்ரா மீது எழுந்த அதே குற்றச்சாட்டுகள் இவர் மீதும் எழுப்பப்பட்டது.
ஏழுமலையானை தரிசித்த ரஞ்சன் கோகாய்! - எழுமலையானை தரிசித்த ரஞ்சன் கோகாய்
ஹைதராபாத்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள ரஞ்சன் கோகாய் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
தனது கடைசி பத்து நாட்களில், மதம், பாதுகாப்பு, அரசியல் தொடர்புடைய பல முக்கிய வழக்குகளின் தீர்ப்பை அவர் வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதையடுத்து, நவம்பர் 17ஆம் தேதி அவர் ஓய்வுபெறவுள்ளார். இந்நிலையில், ரஞ்சன் கோகாய் தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று இன்று வழிபட்டனர். இவரின் வருகையால் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மறைந்த டி.என். சேஷன் பெயரில் புதிய இருக்கை: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!