அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார் பகுதிதான் ரஞ்சன் கோகோயின் பூர்வீகம். காங்கிரஸ் பாரம்பரியத்தில் ஊறிய குடும்பம் அவருடையது. கோகோயின் தந்தை கேசாப் சந்திர கோகோய், அஸ்ஸாம் முதலமைச்சராக இருந்தவர். நேர்மையான அரசியல்வாதி. ரஞ்சனின் அண்ணன் அஞ்சன் கோகோய் ஏர்மார்ஷலாக இருந்தவர்.
முதல் படி...
1978ஆம் ஆண்டு கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய ரஞ்சன், அதே நீதிமன்றத்தின் நீதிபதி ஆனார். 2010ஆம் ஆண்டு பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி என அடுத்தடுத்து உயர்ந்தார்.
'உச்ச நீதிமன்றத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது'.. இறுதிப்பணி நாளில் உருகிய கோகாய்
அதிரடி நகர்வுகள்...
ரிலையன்ஸ் நிறுவனம் மீதான வழக்கு, குஜராத் அரசுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளைக் கையாண்டார். கடந்த ஆண்டில் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய கொலீஜியத்தின் நான்கு நீதிபதிகளில் ரஞ்சனும் ஒருவர். நீதிபதி கர்ணன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையையும் அவர் விமர்சித்திருந்தார். இப்பேர்பட்டவர் தலைமை நீதிபதியாக வந்ததும் பல அதிரடிகள் அரங்கேறப்போகின்றன என இந்தியாவே எதிர்பார்த்தது. ஆனால் அவர்மீதே பாலியல் புகார் அதிரடியாகக் கிளம்பியது.
ஓய்வில்...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, நவம்பர் 18ஆம் தேதி பிறந்த நாள். நவம்பர் மாதம் 2019, 17ஆம் தேதி இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து அவர் ஓய்வுபெறுகிறார். அவருக்கு முன்பு 45 பேர் தலைமை நீதிபதியாக இருந்துள்ளனர். அவர்களின் பணி ஓய்வெல்லாம் நீதித்துறை வட்டாரத்துக்குள் மட்டுமே முடிந்துபோன செய்தி. ஆனால், ரஞ்சன் கோகோய் ஓய்வு, தேசத்தின் பேசுபொருளாகியுள்ளது.