பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் மிர் அலி நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூத்த அரசு ஊழியர் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவமானது நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜுபைதுல்லா கான், ஃபர்மானுல்லா, நைமத்துல்லா ஆகிய மூவர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்திருக்கின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த மூன்று பேரும் ரமலான் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.