இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும், நாட்டில் இதுவரை மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 945 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 லட்சத்து 40 ஆயிரத்து 135 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 8 லட்சத்து 17 ஆயிரத்து 209 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 30 ஆயிரத்து 601 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் சாலையோரத்தில் தள்ளுவண்டிக் கடையில் 14 வயது சிறுவன் முட்டைகளை விற்றுக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள், அந்த சிறுவனிடம் 100 ரூபாய் லஞ்சமாக கேட்டு மிரட்டியுள்ளனர்.