தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல்!

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதைத் தொடர்ந்து, நாளை மாநிலங்களவையில் தாக்கலாக உள்ளது.

RS
RS

By

Published : Dec 10, 2019, 9:01 PM IST

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கலாகவுள்ளது. முன்னதாக, 311 உறுப்பினர்களின் ஆதரவோடு மக்களவையில் இந்த மசோதா நேற்று நிறைவேறியது. மக்களவையில் இந்த மசோதாவை சிவசேனா கட்சி ஆதரித்து வாக்களித்திருந்தது. மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு தெரிவிக்காது என உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான எங்கள் சந்தேகத்தை தீர்க்காத வரை மாநிலங்களவையில் ஆதரவு தெரிவிக்க மாட்டோம். இந்த மசோதாவால் ஒரு குடிமகன் அச்சம் தெரிவித்தால்கூட அவரின் அச்சத்தை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அவர்களும் நம் குடிமகன்கள்தான் அவர்களின் கேள்விக்கு நாம் பதிலளிக்க வேண்டும்" என்றார்.

240 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில், மசோதாவை நிறைவேற்ற 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 124-130 உறுப்பினர்களின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது, உண்மையாக இருந்தால், மாநிலங்களவையில் மசோதா நிறைவேறுவது உறுதி.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவுக்கு மாநிலங்களவையில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். இதேபோல், ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆறு உறுப்பினர்களும் அகாலி தளத்திற்கு மூன்று உறுப்பினர்களும் உள்ளனர். இதை தவிர்த்து பிராந்திய கட்சிகளான பிஜு ஜனதா தளத்திற்கு ஏழு உறுப்பினர்களும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு உறுப்பினர்களும் மாநிலங்களவையில் உள்ளனர். பாஜகவுக்கு மாநிலங்களவையில் 83 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வீழ்கிறதா மோடி - அமித் ஷா இணை?

ABOUT THE AUTHOR

...view details