தேசிய குடியுரிமை மசோதாவிற்கு அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், அனைத்திந்திய அசாம் மாணவர்கள் சங்க தலைமை ஆலோசகர் சமுஜால் பட்டார்சார்யா, தலைவர் தீபாங்கர் குமார் நாத் ஆகியோர் டெல்லியில் ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சியின் தேசியத் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகியை சந்தித்துப் பேசினர். இந்நிகழ்வில் வடகிழக்கு மாணவர் சங்க நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
தேசிய குடியுரிமை மசோதாவிற்கு அனைத்திந்திய அசாம் மாணவர் சங்கம் எதிர்ப்பு.! - தேசிய குடியுரிமை மசோதா
டெல்லி: தேசிய குடியுரிமை மசோதா தொடர்பாக அசாம் மாணவர்கள் சங்கம் மற்றும் வடகிழக்கு மாணவர்கள் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகியை சந்தித்துப் பேசினர்.
அப்போது தேசிய குடியுரிமை மசோதாவிற்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டிற்கு முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறினார். மேலும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும் அவரிடம் கேட்டுக் கொண்டனர்.
அதற்கும் தியாகி ஆதரவான பதிலையை கொடுத்தார். அனைத்திந்திய அசாம் மாநில சங்க நிர்வாகிகள் டெல்லியில் தொடர்ந்து முகாமிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தேசிய குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு: அசாமில் தீப்பந்தம் ஏந்தி பேரணி.!