குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (சிஏஏ) இந்தியாவின் பல பகுதிகளில் சூடான விவாதங்கள், 'வன்முறை' ஆர்ப்பாட்டங்களை உருவாக்கியுள்ளது. இதுஎல்லைகளுக்கு அப்பால்இஸ்லாமிய, இஸ்லாமிய அல்லாத நாடுகளிலிருந்து விமர்சனங்களையும் மோசமான கருத்துகளையும் பெற்றுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் அதன் உள்ளடக்கம், நோக்கத்தில் மிகத் தெளிவாகவும் உள்ளது. இந்தச் சட்டம் மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறிய முஸ்லிம்கள் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்குகிறது. அவர்கள் 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவிற்கு வந்திருக்க வேண்டும்.
மதச்சார்பின்மை மீதான மீறல்
மத்திய அரசின் இந்த 'தேர்ந்தெடுத்தல்' அணுகுமுறை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விமர்சனங்கள் வெடிப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. ஆகவே இந்திய சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவுகள் இதனை எதிர்க்கின்றன.
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பேரணியில் ப. சிதம்பரம், ஸ்டாலின், வைகோ, கே.எஸ். அழகிரி, முத்தரசன், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தச் சட்டம் மீதான விமர்சனத்தின் பிரதானம் என்னவென்றால், இத்திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பை மீறுகிறது என்பதே. அதாவது இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மை மீதான மீறல். இந்தக் கருத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஐ.நா. அலுவலக செய்தித் தொடர்பாளர், 'சமத்துவத்திற்கான பாகுபாட்டை இது உறுதி செய்கிறது' எனக் கூறியிருந்தார். மேலும் மக்கள் மத்தியில் இது பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது எனப் போராட்டம் நடக்கிறது. அண்டை நாட்டு அகதிகளால் தங்கள் பிராந்தியத்தின் கலாசாரம் நீர்த்துப்போகும் என அம்மாநில மக்கள் அஞ்சுகின்றனர்.
'பாரபட்ச' உள்பிரிவு
இதுஒருபுறமிருக்க, குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் அங்கு போராட்டம் நடக்கிறது. இச்சூழலில் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் முஸ்லிம்கள் குடியுரிமை வழங்கலிலிருந்து விலக்கப்படுவதால் அவர்கள் கிளர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களை பாரபட்சமாகக் கருதுகின்றனர் என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. சிறுபான்மையினரின் மக்கள் தொகை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் கூர்மையான சரிவை பதிவுசெய்துள்ள நாடுகளில், முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரை துன்புறுத்தியதற்காக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை இந்திய குடியுரிமை சட்டம் அவமானப்படுத்துகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு எனவே அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய ஆதரவாளர்களும் இந்தத் திருத்தத்திற்கு பதிலளிக்கும் உரிமை குறித்து விடையளித்ததில் ஆச்சரியமில்லை. இதற்கிடையில் இந்திய குடியுரிமை சட்டத்தில் உள்ள 'பாரபட்சமான' உள்பிரிவுகளை ரத்து செய்யுமாறு இந்தியாவை வலியுறுத்தி பாகிஸ்தான் தனது நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
முன்னதாக ஜெனீவாவில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அகதிகள் நெருக்கடி குறித்து எச்சரித்தார். இது குறித்து கூறிய அவர், "இது அகதிகளுக்கு இடையோன மோதல்; நிச்சயமாக நெருக்கடிக்கு வழிவகுக்கும். இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான மோதல்" என்றார்.
மத சுதந்திரம், சமத்துவ உரிமைக்கு ஆதரவாக நிற்பவர்களோ இச்சட்டத்தை 'ஆபத்தான திருப்பம்' எனப் பொருள் கொள்கின்றனர்.
வங்கதேச அமைச்சர்கள் தங்களது இந்திய பயணத்தை ரத்து செய்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். 'வங்கதேசம் சிறுபான்மையினரை துன்புறுத்துகிறது' என்ற இந்தியாவின் கூற்றை நிராகரிக்கிறோம் என அந்நாட்டு ஆட்சியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தூதர், சீக்கியர்கள் உள்பட சிறுபான்மையினரை தனது நாடு மதிக்கிறது என்றார். 370ஆவது சட்டப்பிரிவை நீக்கிய இந்தியாவை விமர்சித்த மலேஷியா பிரதமர் மகாதீர் முகமது, 'இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தின் கருத்துகள் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன' எனக் குற்றஞ்சாட்டுகிறார்.
மேற்கத்திய நாடுகளும் இந்தச் சட்டத்தை விமர்சித்துவருகின்றன. மத சுதந்திரம், சமத்துவ உரிமைக்கு ஆதரவாக நிற்பவர்களோ இச்சட்டத்தை 'ஆபத்தான திருப்பம்' எனப் பொருள் கொள்கின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பேரணி வெளிநாட்டிலிருந்து தோன்றிய பொய்யான கதைகளை இந்தியா உடனடியாகவும் முறையாகவும் மறுத்துவிட்டது. அதே நேரத்தில் தெளிவு, உத்தரவாதங்கள் மூலம் உள்நாட்டில் உள்ள உணர்வுகளையும் உறுதிப்படுத்துகிறது. இந்தப் பிரச்னையில் பாகிஸ்தான் என்ன சொல்ல வேண்டும் என்பதில் இந்தியா கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தற்போது இருப்பதைவிட மோசமாக இருக்க முடியாது.
இந்து பெரும்பான்மை
எவ்வாறாயினும் வங்கதேசம், ஆப்கானிஸ்தானுடனான நல்லுறவுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். இந்தத் திருத்தத்தின் நிகர வீழ்ச்சி என்னவென்றால், அது சர்ச்சையையும் பிரிவையும் உருவாக்கியுள்ளது.
வெளிநாடுகளில் 'மதச்சார்பற்ற நாடு' என்ற பெயர்பெற்ற இந்தியாவின் நற்பெயர் சேதம் அடைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவை 'இந்து பெரும்பான்மை' மாநிலமாக (இந்து ராஷ்டிரா) மாற்றுவதற்கான ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரலுக்கு ஆளும் பாஜக அரசு நம்பகத்தன்மையை அளிக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான அதிருப்தி வரவிருக்கும் எதிர்ப்பின் அளவைக் குறிக்கிறது. இது தேசிய அளவிலான குடிமக்களின் பதிவேட்டை (NRC) அறிமுகப்படுத்துவதற்கு நாடுதழுவிய அளவில் எதிர்ப்பைஅரசுஎதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அமைதி நிலை வேண்டும்
எனது கருத்து - மத சிறுபான்மையினரை கறுப்பு, வெள்ளை நிறத்தில் அடையாளம் காணாததன் மூலம் சர்ச்சையைத் தவிர்க்க முடியும். 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு தப்பிவந்த மத சிறுபான்மையினர், மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டில் சமூக பிளவு ஏற்பட்டுவிடக் கூடாது. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இந்த வழக்கின் தீர்ப்பைப் பார்க்க வேண்டும். நாட்டில் அமைதி நிலை திரும்ப வேண்டும்.