அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கண்டறியும் பொருட்டு அந்த மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்பட்டது. குடியுரிமை திருத்த மசோதாவின்படிவங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வந்து ஆறு ஆண்டுகளாக வசித்துவரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பெளத்தர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள்பதிவேடு வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டன. அப்போது பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியானது. அதில் மொத்தம் 19 லட்சத்து ஆறாயிரத்து 657 பேர் இறுதிப்பட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு முன்னாள் தலைவர் ஃபக்ருதின் அலி அகமதின் குடும்பத்தார் உள்ளிட்ட பலரின் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.