டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் ஓக்லா விஹார் (okhla vihar) நிறுத்தத்தில் பயணி ஒருவரின் உடைமைகளை எக்ஸ் ரே சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 25 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டறிப்பட்டது.
அதைத் தொடர்ந்து மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படை (சி.ஐ.எஸ்.எஃப்.), அவரிடம் நடத்திய விசாரணையில், பணத்தைக் கொண்டு வந்தது ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுன் குமார் என்றும் தெரியவந்தது.
மேலும் அவர், டெல்லியில் உள்ள ஒரு கொரியர் ஏஜென்சியில் வேலை பார்த்து வருவதாகவும், அந்த 25 லட்ச ரூபாய் ஒரு தொழிலதிபரிடம் இருந்து வசூல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
பணத்தைக் கைப்பற்றிய சி.ஐ.எஸ்.எஃப். அலுவலர்கள் வருமானத் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அர்ஜுனிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்க: ஆர்.ஓ. குடிநீர் விற்பனை - நாம் குடிக்கும் நீர் எவ்வளவு தூய்மையானது?