டெல்லியில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கரோனா தொற்றால் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய ஆயுதப் படை பிரிவில் கரோனா தொற்றால் ஏற்பட்ட 13ஆவது உயிரிழப்பு இதுவாகும்.
உயிரிழந்தவர் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவந்த சவுத்திரி நரசிங் பாய் (55) என்றும், இவர் மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தின் பர்வாஹா நகரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை முதலாவது பட்டாலியனில் இவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
ரத்த சோகை காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் இச்சூழலில், விமான நிலையம், விண்வெளி நிலையங்கள், அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள்தான் பாதுகாப்புப் பணியில் பணியாற்றிவருகின்றனர்.
மத்திய பாதுகாப்புப் படையில் இதுவரை 1,670 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் கடந்த ஜூன் 6ஆம் தேதிவரை 1,157 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் 510க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பணியின் போது கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்: சொந்த கிராமத்தில் அடக்கம்!