டெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி நினைவு அருங்காட்சியகத்தில் பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தலைமைக் காவலர் அலோக் குமார் (43) கடந்த திங்கள்கிழமை (நவ. 02) அன்று ஹீட்டரில் (heater) உணவு சமைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டதாக துக்ளக் காவல் நிலைத்திற்கு தகவலளிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் காயமடைந்த தலைமைக் காவலரை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர்.