தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) தேர்வு தேதி அறிவிப்பு - தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியீடு

டெல்லி: இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் 10, 12ஆம் வகுப்புகளில் நடத்தப்படாமல் உள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

CICSE to conduct pending Class 10 and 12 board exams from July 1
CICSE to conduct pending Class 10 and 12 board exams from July 1

By

Published : May 22, 2020, 7:22 PM IST

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாட்டில் நடக்கவிருந்த பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் 10, 12ஆம் வகுப்புகளில் நடத்தப்படாமல் உள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதில், ஜூலை ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் 10, 12ஆம் வகுப்புகளுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

அதன்படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 2 முதல் 12ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் எனவும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் 14ஆம் தேதி வரை விடுபட்ட தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளின் போது தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய செயலி...!

ABOUT THE AUTHOR

...view details