தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கவர்ச்சி உடையில் வந்த அக்ஷரா ஹாசன்-வைரல் புகைப்படம் - கவர்ச்சி

கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் படு கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அக்ஷரா ஹாசன்

By

Published : Feb 15, 2019, 12:17 PM IST

துணை இயக்குநர், நடிகை என பன்முகத்தன்மை கொண்ட அக்ஷரா ஹாசன், தற்போது நடிகர் விக்ரமுடன் 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில், வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர், நடிகையாக அறிமுகமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்துவருகிறார்.

மேலும், அக்ஷராவிற்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததற்கு காரணம், ஸ்ருதி ஹாசனை போன்று கவர்ச்சியாக நடிக்காமல் ஒதுங்கியிருந்ததே என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு அக்ஷராவின் அந்தரங்க புகைப்படங்கள் வலைதளத்தில் கசிந்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைப்பார்த்த நெட்டிசன்கள் கமலின் மகள் என்றுகூட பார்க்காமல் வறுத்தெடுத்தனர்.

அக்ஷரா ஹாசன்


இதனைத்தொடர்ந்து, அந்தரங்க புகைப்படம் வெளியானது குறித்து தற்போது விசாரணையும் நடந்துவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஃபிலிம்பேர் கிளாமர் அண்டு ஸ்டைல் விழாவில் கலந்துகொண்ட அக்ஷரா ஹாசன், பார்பிகேர்ள் பொம்மை போல் அசத்தலான கவர்ச்சியான உடையில் வந்து எல்லோரையும் திகைக்க வைத்துள்ளார்.

விழாவிற்கு வந்த அனைவரதும் பார்வை இவர்மீதுதான் விழுந்தது. தற்போது, படுகவர்ச்சியான இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details