தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடிகர் ஆனந்தராஜ் தம்பியின் சொத்தை விற்று பணம் தர மக்கள் கோரிக்கை! - நடிகர் ஆனந்தராஜ் தம்பி மீது சொத்தை விற்று பணம் தர மக்கள் கோரிக்கை

புதுச்சேரி: நடிகர் ஆனந்தராஜ் தம்பி சொத்துக்களை விற்று எங்களுக்கு பணம் பெற்று தர வேண்டும் என்று ஏலச்சீட்டு கட்டியவர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர் ஆனந்தராஜ் தம்பி மீது சொத்தை விற்று பணம் தர மக்கள் கோரிக்கை!
நடிகர் ஆனந்தராஜ் தம்பி மீது சொத்தை விற்று பணம் தர மக்கள் கோரிக்கை!

By

Published : Mar 12, 2020, 8:47 AM IST

புதுவை திருமுடி நகரைச் சேர்ந்தவர் கனகசபை. நடிகர் ஆனந்தராஜ் தம்பியான இவர், வட்டிக்கு பணம் கொடுப்பது, சீட்டு பிடிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார். இந்தநிலையில், கனகசபை கடந்த 5ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், கனகசபையிடம் ஏலச் சீட்டில் பணம் கட்டிய நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்தப் பணத்தை திரும்பப் பெறுவது தெரியாமல் இருந்துள்ளனர். இதையடுத்து, இது தொடர்பாக மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் சென்று முறையிட்டுள்ளனர்.

கனகசபையின் சொத்தை விற்று பணத்தைத் தரக் கோரிக்கை.

பின்னர் சீட்டு கட்டியவர்களில் ஒருவராந சுப்பிரமணி என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் தற்கொலை செய்துகொண்ட கனகசபையிடம் பல ஆண்டுகளாக லட்சக்கணக்கில் சீட்டு பணம் கட்டி வருகிறோம். பாதிக்கப்பட்ட எங்களுக்கு வரவேண்டிய பணம் என்னவாகும் என அதிர்ச்சி அடைந்து உள்ளோம்.

அந்தப் பணத்திற்கு கனகசபையின் உடன் பிறந்த சகோதரர், சகோதரிகள், வாரிசுதாரர்கள் ஆகியோர் தான் பொறுப்பேற்க வேண்டும். நடிகர் ஆனந்தராஜ் தம்பியான கனகசபையின் அசையும், அசையா சொத்துக்கள், ரொக்கப் பணம், வங்கி கணக்குகள், புதுவை நகரில் உள்ள வீடுகள் ஆகிவற்றை முடக்கி எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை காவல்துறையினர் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க...காட்டிக்கொடுத்த டேப்... மாட்டிக்கொண்ட கொலையாளிகள் - காவலாளி கொலையில் துப்பு துலங்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details