பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். அதில் படிக்கும் மாணவிகளின் வாழ்க்கையை அவர் சீரழித்துள்ளதாகவும், தன்னை கொலை செய்ய அவர் முயற்சித்து வருவதாகவும், 23 வயது சட்டக் கல்லூரி மாணவி சமூகவலைதளங்களில் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார். இதையடுத்து, மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகாரளித்தார்.
சட்டக் கல்லூரி மாணவி வழக்கு; சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவு! - Law Student
டெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![சட்டக் கல்லூரி மாணவி வழக்கு; சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4316573-thumbnail-3x2-chin.jpg)
இது தொடர்பாக, வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இதனை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதற்கிடையே, காணாமல் போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டு கொண்டு வந்த உத்தரப் பிரதேச காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், வழக்கை அலகாபாத் நீதிமன்றம் விசாரிக்கவும், மாணவிக்கும், மாணவியின் குடும்பத்தாருக்கும் காவல் பாதுகாப்பு வழங்கவும், மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.