உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் மீது சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இச்சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு 20ஆம் தேதி சின்மயானந்த்தை கைது செய்தது. அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தை அணுகச்சொல்லி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.