தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

18 கி.மீ தொலைவுக்கு இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது - பல்லம் ராஜூ

டெல்லி: டெப்சாங் சமவெளிகளில் இந்திய - சீனா எல்லைப் பகுதியில் (Line of Actual Control) 18 கி.மீ வரை இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.எம் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.

பல்லம் ராஜூ
பல்லம் ராஜூ

By

Published : Jun 27, 2020, 3:26 PM IST

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பல்லம் ராஜு கூறுகையில், ”ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை சீனா புதிய அத்துமீறல்களையும், புதிய கட்டுமானங்களையும் செய்துள்ளது. இதனால், கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதி இரவு நடைபெற்ற வன்முறை மோதல்களில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.

சீனப் படைகள் இப்போது லடாக் நகரமான பர்ட்ஸுக்கு வந்துள்ளனர். தவுலத் பெக் ஓல்டி (டி.பி.ஓ) சாலையில் இருந்து 7 கி.மீ. முக்கியமான வான்வழிப் பகுதியிலிருந்து 25 கி.மீ தூரத்திற்குள் அவர்களின் பீரங்கிகள் உள்ளன” என்று அவர் கூறினார்.

மேலும், கல்வான் பள்ளத்தாக்கிலும், டெப்சாங் சமவெளிகளிலும் சீன ஊடுருவலை ஒப்புக்கொள்வதற்கு மோடி அரசாங்கம் ஏன் பயப்படுகிறது. முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் மோடி அரசாங்கம் ஏன் எங்களின் துணிச்சலான வீரர்களை இழிவுபடுத்துகிறது. இந்தியாவின் தேசத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் மோடி அரசாங்கத்தின் ராஜதந்திரம் ஏன் உதவவில்லை என்று பல்லம் ராஜு கேள்விகளை எழுப்பினார்.

ABOUT THE AUTHOR

...view details