கடந்த இரு மாதங்களாக இந்திய-சீன எல்லையில் சீன ராணுவம் தனது படை வீரர்களைக் குவித்து ஆக்கிரமிப்புப் பணிகளை மேற்கொண்டுவந்தது. இரு நாடுகளுக்குமிடையே எல்லைப் பூசல் கடந்த மாதம் 15ஆம் தேதி (ஜூன் 15) உச்சமடைந்து, இரு தரப்பு ராணுவமும் மோதிக் கொண்டன. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், சீனத் தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பூசலுக்குப் பின் இரு நாட்டு ராணுவத் தலைமையும் மூன்று கட்டங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொண்டன. இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையின் எதிரொலியாக தற்போது சீன ராணுவம் கல்வான் பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ. பின்வாங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை இந்திய ராணுவத் தரப்பும் உறுதிசெய்துள்ளது.