லடாக்கில் உள்ள இந்திய-சீன நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவிவருகிறது.
இதன் காரணமாக, இரு நாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு பெருந்திரளாகக் குவித்துள்ளதால் போர் பதற்றம் நிலவிவருகிறது.
இந்தப் பிரச்னையை அமைதியாகத் தீர்ப்பது குறித்து தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையின் அடுத்தக்கட்டமாக, இந்திய சீனப் படைகளைச் சேர்ந்த துணை ராணுவ தளபதிகள் வரும் 6ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.