தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடியின் உரையை நீக்கிய சீன சமூக ஊடகம்! - சீனாவின் வி-சாட் செயலியில் பிரதமர் உரை நீக்கம்

டெல்லி: இந்தியா - சீனா எல்லை தொடர்பான பிரதமர் மோடியின் உரையை சீன சமூக ஊடகம் நீக்கியுள்ளது.

modi
modi

By

Published : Jun 21, 2020, 5:04 PM IST

இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளாத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தின் விரிவான தகவலை அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது, பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால், எல்லை பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கருத்துக்களை, சீன சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் வெய்போ, வி-சாட் செயலிகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பிரபல வி-சாட் செயலியானது, எல்லை பிரச்னை தொடர்பான பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை துறை அமைச்சகத்தின் கருத்துக்களை நீக்கியுள்ளது . இது குறித்து சீன ஊடகம் வெளியிட்ட அறிக்கையில், "அரசு ரகசியங்களை தெரிவிக்கக் கூடாது. தேச பாதுகாப்புக்கு ஆபத்து நேரக் கூடாது என்ற காரணத்தினாலே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாக, இந்தியாவில் அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியான எல்லை பிரச்னை குறித்த பிரதமர் கருத்துக்கள், இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான தொலைபேசி உரையாடல் ஆகியவை வி-சாப் சமூக ஊடகங்கில் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details