தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Mamallapuram Modi-Xi Meet:ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள மோடி, ஜி ஜின்பிங்! - மோடி, ஷி ஜின்பிங் சந்திப்பு

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையிலான சந்திப்பு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Modi - Xi Jinping

By

Published : Oct 7, 2019, 4:53 PM IST

Updated : Oct 11, 2019, 12:12 PM IST

Mamallapuram Modi-Xi Meet:சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டின் பாரம்பரிய கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் அவர் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பு வரும் 11ஆம் தேதி நடக்கவுள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் மாமல்லபுரத்தில் சிறிது தூரம் நடந்து செல்கின்றனர். மேலும், ஐந்து ரதம் அருகே அமர்ந்து புகைப்படம் எடுக்கவுள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த பயணத்தின்போது, இரு நாட்டுத் தலைவர்களும் நான்கு முறை சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பு ஐந்து மணி நேரத்திற்கும் மேல் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 11ஆம் தேதி மதியம் ஒன்றரை மணி அளவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வந்தடைகிறார்.

இந்த சந்திப்பின்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவான நிலையை பல நாடுகள் எடுத்திருந்தபோதிலும், சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலையை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் உலக அரங்கில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க:

மாமல்லபுரத்தில் இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பு: பாதுகாப்பு வளையத்துக்குள் பல்லவ நகரம்

Last Updated : Oct 11, 2019, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details