தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சீனர்கள் தலைகாட்டும்போது தலைமறைவான பிரதமர் மோடி' - ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் சீன ராணுவப் படையினர் நுழைந்து அச்சுறுத்தும் வேளையில், பிரமதர் மோடி மௌனம் காப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

Rahul
Rahul

By

Published : Jun 10, 2020, 3:09 PM IST

இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில், சீனா சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவப் படையினரை குவித்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது. சுமார் 15 நாள்களாக நிலவிவந்த அசாதாரண சூழல் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சமரசத்தை அடைந்துள்ளது. இரு தரப்பினரும் தங்கள் ராணுவத்தை மெல்லமெல்ல விலக்கிக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இந்த அசாதாரண சூழல் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இரு தினங்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை விமர்சித்த ராகுல், தற்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.

அதில், ”சீனர்கள் இந்தியாவின் லடாக் பகுதிக்குள் நுழைந்து அச்சுறுத்துகின்றனர். ஆனால், இந்தியப் பிரதமரோ வாய் திறக்காமல் மௌனம் காத்து, இந்த நிகழ்விலிருந்து முற்றாகத் தலைமறைவாகியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஊரடங்கில் கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details