சீனக் கல்விக் கழகம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டார். ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலில் சீன தரப்பு சார்பாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு இந்திய ராணுவ வீரர்களே காரணம் என அவர் மீண்டும் குற்றம் சுமத்தினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கல்வான் சம்பவத்தில் எது சரி, எது தவறு என்பது தெளிவாக உள்ளது. அங்கு நடைபெற்ற மோதலுக்கு நாங்கள் பொறுப்பில்லை. அமைதியை நிலைநாட்ட சீனா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவிற்கு வியூக ரீதியான அச்சுறுத்தலை விளைவிக்கவில்லை. இரு நாடுகள் முயற்சி மேற்கொண்டதன் மூலம் இரு தரப்பு ராணுவமும் பெரும்பாலான எல்லைப் பகுதிகளில் படைகளைத் திரும்பபெற்றுக்கொண்டன. தற்போது பதற்றம் குறைந்துள்ளது.