கடந்த வாரம் வடக்கு சிக்கிமில் சீன மக்கள் விடுதலை ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் நடந்த மோதலில் இரு தரப்பிலும் சேதாரம் ஏற்பட்டது. தற்போது, லடாக்கில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் ஊருவியுள்ளன.
இந்திய எல்லைக்குள் சீனா ராணுவ ஹெலிகாப்டர்... ரோந்து பணியில் இந்தியப் போர் விமானம் - இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனா ராணுவ ஹெலிகாப்டர்
சென்னை: லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்குள் சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் பறந்ததையடுத்து, இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் களமிறக்கப்பட்டுள்ளன.
Chinese choppers spotted near Ladakh LAC
இந்தியாவைத் தன் காலடியில் வைத்திருக்க நினைத்து சீனா தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களை நிகழ்த்திவருவதால், தற்போது கட்டுப்பாட்டு எல்லையில் இந்தியப் போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சீன ராணுவத்தால் இந்தியா எல்லைக்குள் நுழைய முடியவில்லை என நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.