தமிழ்நாடு

tamil nadu

இந்தியா-சீனா எல்லையில் போர் பதற்றம்!

By

Published : Sep 10, 2020, 4:12 AM IST

டெல்லி: கிழக்கு லடாக்கின் பங்கோங் ஏரிக்கு தெற்கே இந்தியா ஆதிக்கம் செலுத்துவதால், ஏரிக்கு வடக்கே ஃபிங்கர் பகுதியில் சீனா புதிய கட்டமைப்பைத் தொடங்கியுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா-சீனா எல்லையில் போர் பதற்றம்!
இந்தியா-சீனா எல்லையில் போர் பதற்றம்!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இதன் இடையே கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன துருப்புக்களை இந்திய படைவீரர்கள் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். சீன தரப்பில் 30 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன துருப்புக்கள் அத்துமீற முயன்றபோது, இந்திய வீரர்கள் அதை முறியடித்தனர். அதைத் தொடர்ந்து இரு தரப்பு ராணுவ உயர் அலுவலர்கள் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படாமல் போர் பதற்றம் நிலவிவருகிறது.

இந்நிலையில் செவ்வாய்கிழமை மாலை பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரையிலும், ஷென்பாவ் மலைப்பகுதியிலும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தனது துருப்புக்களை அதிகரித்துள்ளது.

இந்தியா- சீனா இருநாட்டு ராணுவ தரப்பிலிருந்தும் துருப்புக்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. "இந்திய துருப்புக்கள் எல்லையில் நிலவுவதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்" என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details