தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - சீனா மோதல்: எல்லையில் பதற்றத்தை குறைக்க சீனா முடிவு! - எல்லையில் பதற்றத்தை குறைத்து கொள்ள சீனா முடிவு

பெய்ஜிங்: எல்லையில் பதற்றத்தை குறைத்து கொள்ள சீனா முடிவு செய்துள்ளதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

china
china

By

Published : Jun 18, 2020, 8:57 PM IST

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது இந்திய - சீன படைகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் சீனா தரப்பிலும் சுமார் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் நேற்று தொலைபேசியில் உரையாடினர்.

இந்நிலையில், எல்லையில் பதற்றத்தை குறைத்து கொள்ள சீனா முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், " இரு நாடுகளின் ராணுவ உயர் அலுவலர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்துக்கு கட்டுப்பட்டு, பதற்றத்தை குறைத்து, எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட சீனா முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

பல முன்னணி நாடுகளும் இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதல் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details