தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராணுவப் படைகளை விலக்கிக் கொண்ட சீனா! - சீன ராணுவம்

டெல்லி: கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவப் படைகளை விலக்கிக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சீன எல்லைப் பிரச்சனை
இந்திய சீன எல்லைப் பிரச்சனை

By

Published : Jun 25, 2020, 10:31 PM IST

Updated : Jun 26, 2020, 6:20 AM IST

கிழக்கு லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதி இந்தியா, சீனா ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

சீனக் கட்டுப்பாட்டிலிருந்த 10 ராணுவ வீரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சீனத் தரப்பில் படுகாயமடைந்தவர்கள் உள்பட 43 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. உயர்மட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சீனத் தரப்பு பின்பற்றியிருந்தால் இந்தச் சூழலை தவிர்த்திருக்கலாம் என இந்தியா தெரிவித்தது.

இதையடுத்து, ஜூன் 22ஆம் தேதி மோல்டோவில் இந்தியா, சீனா இடையே ராணுவத் தளபதிகள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கிழக்கு லடாக் பகுதியில் படை வீரர்களை பரஸ்பரம் விலக்கிக் கொள்வது என ஒப்புக்கொள்ளப்பட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சூழலில், ராணுவத் தளபதிகள் நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்டதன்படி கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம் படைகளை விலக்கிக் கொண்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாகத் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

Last Updated : Jun 26, 2020, 6:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details