தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு - nation's army

ஜூன் 6ஆம் தேதி ராணுவ அளவிலான பேச்சுவார்த்தையின் போது, ​​இந்தியாவும் சீனாவும் 2018ஆம் ஆண்டு வூஹான் உச்சி மாநாட்டில் தங்கள் தலைவர்கள் எடுத்த பரந்த முடிவுகளை பின்பற்ற ஒப்புக்கொண்டன. இந்தியா-சீனா எல்லை தகராறு 3,488 கி.மீ நீளமுள்ள எல்லைக்கோடு பகுதியைக் கொண்டதாகும். மீளும், அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

India china border issue
India china border issue

By

Published : Jun 10, 2020, 9:01 PM IST

பெய்ஜிங்: ராணுவ அளவிலான பேச்சுவார்த்தையின் போது, ​​இந்தியாவும் சீனாவும் 2018ஆம் ஆண்டு வூஹான் உச்சி மாநாட்டில் தங்கள் தலைவர்கள் எடுத்த பரந்த முடிவுகளை பின்பற்ற ஒப்புக்கொண்டன.

இந்தியா-சீனா எல்லை தகராறு 3,488 கி.மீ நீளமுள்ள எல்லைக்கோடு பகுதியைக் கொண்டதாகும். மீளும், அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

இந்தியா - சீனா இடையே 1962ஆம் ஆண்டில் போர் நடைபெற்றது. 2017ஆம் ஆண்டு கிழக்கு இமாலய பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் இரு தரப்பு படைகளுக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இரு நாட்டு படைகளும் 3 மாதங்கள் முற்றுகையிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500கி.மீ எல்லை பிரச்னையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை. ஒருவருக்கொருவர் வசம் உள்ள தொலைதூரப் பகுதிகளின் பெரிய பகுதிகளுக்கு உரிமை கோர முடியவில்லை.

இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால் அதை ஏற்க இந்தியா நாசூக்காக மறுத்துவிட்டது. இதேபோல் சீனாவும் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இச்சூழலில் ராணுவ பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details